இன்னும் 58 ரன்கள்தான்... கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் உலக சாதனை படைக்க உள்ள விராட் கோலி


இன்னும் 58 ரன்கள்தான்... கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் உலக சாதனை படைக்க உள்ள விராட் கோலி
x

சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் 58 ரன்கள் அடித்தால் விராட் கோலி புதிய உலக சாதனை படைப்பார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் வங்காளதேசத்திற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கிரிக்கெட் வரலாற்றில் சச்சினின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 591 இன்னிங்ஸ்களில் விளையாடி 26942 ரன்கள் குவித்துள்ளார். இவர் இந்த தொடரில் 58 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 27,000 ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை படைப்பார்.

இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களில் 27,000 ரன்கள் அடித்ததே உலக சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story