4-வது டி20 :தொடரை வெல்லுமா இந்தியா ? ஜிம்பாப்வே அணியுடன் நாளை மோதல்
நாளைய போட்டியில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஹராரே,
சுப்மன்கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 13 ரன்கன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இரு அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி நாளை ஹராரேவில் நடக்கிறது.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.நாளைய போட்டியில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, தொடரை இழக்காமல் இருக்க வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Related Tags :
Next Story