3-வது டெஸ்ட் : இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்


3-வது டெஸ்ட் : இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy : ICC Twitter 

தினத்தந்தி 23 Jun 2022 5:25 AM GMT (Updated: 23 Jun 2022 5:26 AM GMT)

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் லீட்ஸில் இன்று நடைபெறுகிறது

லீட்ஸ்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் லீட்ஸில் இன்று நடைபெறுகிறது.முதல் 2 போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய முயற்சி செய்யும் .3 போட்டிகளிலும் வென்று தொடரை முழுமையாகவெல்ல இங்கிலாந்து அணி முனைப்பு காட்டும்.


Next Story