இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு..? - வெளியான தகவல்


இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு..? - வெளியான தகவல்
x

Image Courtesy: AFP

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை 106 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 ஆட்டங்கள் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் 1-1 என சமனில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

இந்நிலையில் எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்த அணியில் காயம் அடைந்துள்ள ஜடேஜா, ஷமி ஆகியோர் இடம் பெறுவது சந்தேகம் எனவும், தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி இடம் பெறுவதும் சந்தேகம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது மட்டுமின்றி ஆட்டநாயகன் விருது வென்ற பும்ராவுக்கு 3-வது போட்டியில் மட்டும் ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் கடைசி இரு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம் பெறுவார் எனவும் கூறப்படுகிறது.


Next Story