தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்

சென்னை,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் கடைசி ஆட்டத்தில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய வீராங்கனைகள் களம் காணுகிறார்கள். இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் ,டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி. தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story