3வது டி20 போட்டி: இந்திய அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு


3வது டி20 போட்டி: இந்திய அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு
x

3வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

பாசட்டரே,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது டி 20 போட்டி இன்று தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் பிராண்டன் கிங் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பிராண்டன் கிங் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கெய்ல் மேயர்சுடன் கேப்டன் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ஆடிய மேயர்ஸ் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

தொடர்ந்து ஆடிய இந்த ஜோடியில் நிகோலஸ் பூரன் 22 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து கெய்ல் மேயர்சும் 73 (50) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மயர் 20 (12) ரன்களும், ரோவ்மேன் பவல் சிறிது நேரம் நீடித்த நிலையில் 23 (14) ரன்களில் கேட்ச் ஆனார்.

முடிவுல் தேவான் தாமஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், ஹோல்டர் 1 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story