3-வது ஒருநாள் போட்டி; நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு...!!


3-வது ஒருநாள் போட்டி; நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு...!!
x

image courtesy; twitter/@ICC

தினத்தந்தி 13 Sept 2023 4:58 PM IST (Updated: 13 Sept 2023 5:54 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது.

லண்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும், மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்ட 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸில் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லதம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

நியூசிலாந்து: வில் யங், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லதம் (கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, கைல் ஜேமிசன், லாக்கி பெர்குசன், பென் லிஸ்டர், டிரென்ட் போல்ட்

இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ரீஸ் டாப்லி


Next Story