வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்; இந்திய அணி அறிவிப்பு


வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்; இந்திய அணி அறிவிப்பு
x

image courtesy: AFP

இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 27ம் தேதி தொடங்குகிறது.

புதுடெல்லி,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்னும், வங்காளதேசம் 149 ரன்னும் எடுத்தன.

தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 64 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து வங்காளதேசத்திற்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேசம், இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் வங்காளதேசம் 234 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 280 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களை 2வது போட்டிக்கான அணியிலும் தக்கவைப்பதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

இந்திய அணி விவரம்; ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்ப்ரீத் பும்ரா, யாஷ் தயாள்.


Next Story