2-வது டி20 போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
பாசட்டரே,
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில் அணி வீரர்களின் பொருட்கள் அடங்கிய 'லக்கேஜ்' மைதானத்திற்கு வந்து சேர தாமதம் ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலாவதாக பேட்டிங்கைத் துவங்க உள்ளது.