நியூசிலாந்து - வங்காளதேசம் இடையிலான 2வது டி20 போட்டி...மழை காரணமாக ஆட்டம் ரத்து..!


நியூசிலாந்து - வங்காளதேசம் இடையிலான 2வது டி20 போட்டி...மழை காரணமாக ஆட்டம் ரத்து..!
x

Image Courtesy: @BLACKCAPS

தினத்தந்தி 29 Dec 2023 3:47 PM IST (Updated: 29 Dec 2023 4:01 PM IST)
t-max-icont-min-icon

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்காளதேச அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.

நேப்பியர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் டி20 போட்டியில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 11.40 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்காளதேச அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டி20 போட்டி வரும் 31ம் தேதி நடைபெறுகிறது.


Next Story