2வது டி20 கிரிக்கெட்; ஸ்காட்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா


2வது டி20 கிரிக்கெட்; ஸ்காட்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
x

Image Courtesy: AFP 

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் இங்கிலிஸ் சதம் (103 ரன்) அடித்து அசத்தினார்.

எடின்பர்க்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 196 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிரடியாக ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் சதம் (103 ரன்) அடித்து அசத்தினார்.

இதையடுத்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஸ்காட்லாந்து 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 126 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 70 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக மெக்முல்லன் 59 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.


Next Story