2-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அபார பந்துவீச்சு... ஆஸ்திரேலியா 270 ரன்களில் ஆல் அவுட்
ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 74 ரன்கள் அடித்தார்.
லீட்ஸ்,
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன மேத்யூ ஷார்ட் - டிராவிஸ் ஹெட் ஒரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தலா 29 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மிட்செல் மார்ஷ், தனி ஆளாக போராட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. மிட்செல் மார்ஷ் 60 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதி கட்டத்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 74 ரன்கள் அடித்து அணி கவுரமான நிலையை எட்ட உதவினார்.
முடிவில் வெறும் 44.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 270 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளும், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத் மற்றும் ஜேக்கம் பெத்தேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்க உள்ளது.