வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது டி20 போட்டி; ரிஷப் பண்ட்- விராட் கோலிக்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ரிஷப் பண்ட்- விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டி20 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி அசத்திய இந்திய அணி, அடுத்து நாளை நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியில் தொடரை முழுமையாக வெல்லும் முனைப்புடன் களம் காணுகிறது.
இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் பயோ பபிள் தனிமைப்படுத்தல் நடைமுறையிலிருந்து விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் அடுத்து நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியில் விளையாட மாட்டார்கள்.மேலும், இலங்கை அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் தொடரிலும் அவர்கள் இருவரும் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருவதை கருத்திற் கொண்டு இருவருக்கும் ஓய்வு அளிக்கும் பொருட்டு இந்த விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story