இலங்கைக்கு எதிரான டி20: ஆஸ்திரேலிய அணி வெற்றி
ஆஸ்திரேலிய அணி டி.எல். விதிப்படி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சிட்னி,
இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி 20 போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் பின்ச் 8 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மெக்டர்மோட் அரைசதம் அடித்து வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருந்தும், அவர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் பதுன் நிஷாங்காவை(36 ரன்கள்) தவிற மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தினேஷ் சண்டிமால் 25 ரன்கள் இறுதியில் போராடினார். 19-ஆவது ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்த்போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து டி.எல். விதிப்படி ஆஸ்திரேலிய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
Related Tags :
Next Story