பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட்: மந்தனா அணி ‘சாம்பியன்’


பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட்: மந்தனா அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 10 Nov 2020 4:27 AM IST (Updated: 10 Nov 2020 4:27 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டியில் மந்தனா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சார்ஜா, 

3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ்-ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த சூப்பர் நோவாஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

இதன்படி முதலில் பேட்டிங் செய்த டிரைல் பிளாசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டியாந்த்ரா டோட்டின், மந்தனா ஜோடி நல்ல அடித்தளம் அமைத்தது. 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்த அந்த அணி, சுழற்பந்து வீச்சு வீராங்கனை ராதா யாதவ்வின் சிறப்பான பந்து வீச்சில் கடைசி கட்டத்தில் வேகமாக விக்கெட்டுகளை இழந்ததால் ரன் வேகம் குறைந்தது. 20 ஓவர்களில் டிரைல் பிளாசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மந்தனா 49 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 68 ரன்கள் எடுத்தார். சூப்பர் நோவாஸ் தரப்பில் ராதா யாதவ் 4 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.

 இதைத்தொடர்ந்து ஆடிய சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 102 ரன்களே எடுத்தது. இதனால் டிரைல் பிளாசர்ஸ் அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 ரன்கள் எடுத்தார். டிரைல் பிளாசர்ஸ் அணி தரப்பில் சல்மா கதுன் 3 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

Next Story