இந்திய ‘ஏ’ அணி வீரர் சுப்மான் கில் இரட்டை சதம்
இந்திய ‘ஏ’ அணி வீரர் சுப்மான் கில் இரட்டை சதம் விளாசினார்.
கிறைஸ்ட்சர்ச்,
கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதலாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 346 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய ‘ஏ’ அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று இந்திய ஏ அணி பேட்ஸ்மேன்கள் பட்டையை கிளப்பினர். பிரியங் பன்சால் 115 ரன்களில் (7 பவுண்டரி, 6 சிக்சர்) கேட்ச் ஆனார். சுப்மான் கில் இரட்டை சதமும் (204 ரன், 22 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ஹனுமா விஹாரி சதமும் (11 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய ஏ அணி 101.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்திருந்த போது இந்த ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது நான்கு நாள் டெஸ்ட் போட்டி வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது.

Related Tags :
Next Story