தென் மண்டல 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணிக்கு 4-வது வெற்றி ரன்ரேட் அடிப்படையில் கர்நாடகா சாம்பியன்
தென் மண்டல 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தமிழக அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கேரளாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.
சென்னை,
தென் மண்டல 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தமிழக அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கேரளாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. ரன்ரேட் அடிப்படையில் கர்நாடக அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
20 ஓவர் கிரிக்கெட் போட்டி
சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மண்டலங்கள் வாரியாக நடந்து வருகிறது. சென்னையில் நடைபெற்ற தென் மண்டல 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 6 அணிகள் கலந்து கொண்டு லீக் முறையில் மோதின.
இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-கேரளா அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த கேரள அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சச்சின் பேபி ஆட்டம் இழக்காமல் 53 ரன்கள் சேர்த்தார். தமிழக அணி தரப்பில் அஸ்வின் கிறிஸ்ட் 3 விக்கெட்டும், ஆர்.சதீஷ் 2 விக்கெட்டும், ரஹில் ஷா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
தமிழக அணி வெற்றி
பின்னர் 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தமிழக அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 39 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
மற்றொரு லீக் ஆட்டத்தில் கர்நாடகா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கோவாவை தோற்கடித்தது. இன்னொரு லீக் ஆட்டத்தில் ஆந்திர அணி 11 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது.
ரன்ரேட்டில் கர்நாடகா ‘சாம்பியன்’
லீக் ஆட்டங்கள் முடிவில் 5 ஆட்டங்களில் ஆடிய கர்நாடகா, தமிழ்நாடு அணிகள் முறையே தலா 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றன. ரன்ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்ற கர்நாடகா அணி (ரன்ரேட் +1.363) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக அணி (ரன்ரேட் +0.314) 2-வது இடம் பெற்றது. சாம்பியன் பட்டம் வென்ற கர்நாடகா அணி அகில இந்திய போட்டிக்கு தகுதி பெற்றது. ஐதராபாத் அணி (3 வெற்றி, 2 தோல்வி) 3-வது இடத்தையும், கேரளா (2 வெற்றி, 3 தோல்வி) 4-வது இடத்தையும், ஆந்திரா (2 வெற்றி, 3 தோல்வி) 5-வது இடத்தையும், கோவா (5 ஆட்டத்திலும் தோல்வி) கடைசி இடமும் பிடித்தன.

Next Story