ஊஞ்சல் அம்மன் கோவில் குடமுழுக்கு


ஊஞ்சல் அம்மன் கோவில் குடமுழுக்கு
x

ஊஞ்சல் அம்மன் கோவில் குடமுழுக்கு

திருவாரூர்

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள தண்ணீர்குன்னம் கிராமத்தில் ஊஞ்சல் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் தீர்மானித்தனர். இதையடுத்து கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவுபெற்றதையொட்டி நேற்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கணபதி பிரார்த்தனை, நவகிரக ஹோமம், நாடிசந்தனம், கோ பூஜை, தீபாராதனை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று, கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story