இன்று நாள் எப்படி..? ராசி பலன்கள்


இன்று நாள் எப்படி..? ராசி பலன்கள்
x

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள்.

21.10.2023 சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 4-ந் தேதி சனிக்கிழமை. சப்தமி திதி இரவு (7.36)க்கு மேல் அஷ்டமி திதி. பூராடம் நட்சத்திரம் இரவு (6.29)க்கு மேல் உத்ராடம் நட்சத்திரம். சித்தயோகம். கீ்ழ் நோக்குநாள்.

நல்லநேரம் : காலை : 8.15-9.00, மாலை : 4.45-5.45

ராகுகாலம் : மதியம்: 9.00-10.30

எமகண்டம் : காலை : 1.30-3.00

குளிகை : காலை: 6.00-7.30

வாரசூலை : கிழக்கு

சூரிய உதயம் : 6.11

அதிர்ஷ்ட எண்கள் : 3,8,9.

தினப்பலன்

மேஷம்

சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்துசேரும். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.

ரிஷபம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நேசித்த நண்பர்கள் பகையாக மாறலாம். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படலாம். அமைதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

மிதுனம்

வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய நட்பால் பொருளாதார விருத்தி ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

கடகம்

இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். கற்றவர்களின் பாராட்டுகளால் கனிவு கூடும். கனிவு பலிதம் உண்டு. ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். கடிதம் கனிந்த தகவலை தரும்.

சிம்மம்

இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும். தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும்.

கன்னி

வாக்குவாதம் அகன்று வளம் காணும் நாள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேவசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் பணியை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

துலாம்

வளமான வாழ்விற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திறற்கு உறுதுணைபுரியும். பலநாட்களாக திட்டமிட்ட காரியமொன்றை இன்று எளிதாக செய்துமுடிப்பீர்கள்.

விருச்சிகம்

பண வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

தனுசு

கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். கேட்ட இடத்தில் சலுகைககள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம்.

மகரம்

வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்பு செலவுகள் உருவாகும். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.

கும்பம்

வரவு திருப்தி தரும் நாள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணைபுரிவர். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை நல்லவிதமாக முடித்து கொடுப்பர். பயணம் பலன் தரும் விதம் அமையும்.

மீனம்

நினைத்த காரியம் நிறைவேறி நிம்மதி காணும் நாள். பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகளைச் சந்திக்கலாம். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகள் அகலும். எதிர்பாராத தொகை கைக்கு வந்து சேரும்.

பொதுப்பலன்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். கடக ராசிக்காரர்களுக்கு நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்ஆதரவு கிடைக்கும் நாள்.

சந்திராஷ்டமம்: இரவு12.09 வரை ரிஷபம்; பிறகு மிதுனம்.


Next Story