இந்த வார விசேஷங்கள்


இந்த வார விசேஷங்கள்
x

ஜூன் மாதம் 20-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 26-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.

20-ந் தேதி (செவ்வாய்)

* ராமநாதபுரம் கோதண்ட ராமசுவாமி உற்சவம் ஆரம்பம்.

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

* சமநோக்கு நாள்.

21-ந் தேதி (புதன்)

* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வருசாபிஷேகம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.

* மேல்நோக்கு நாள்.

22-ந் தேதி (வியாழன்)

* சதுர்த்தி விரதம்.

* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி, அனுமன் வாகனத்தில் புறப்பாடு.

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* கீழ்நோக்கு நாள்.

23-ந் தேதி (வெள்ளி)

* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி, கருட வாகனத்தில் வீதி உலா.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

* கீழ்நோக்கு நாள்.

24-ந் தேதி (சனி)

* சஷ்டி விரதம்.

* சிதம்பரம் நடராஜர், தங்க ரதத்தில் பிட்சாடனராக காட்சி தருதல்.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயங்களில் ஊஞ்சல் உற்சவம் ஆரம்பம்.

* கீழ்நோக்கு நாள்.

25-ந் தேதி (ஞாயிறு)

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நடேசருக்கு அன்னாபிஷேகம்.

* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் வீதி உலா.

* திருக்கோளக்குடி கோளபுரீஸ்வரர் கேடய சப்பரத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

26-ந் தேதி (திங்கள்)

* ஆனி திருமஞ்சனம்.

* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி இந்திர விமானத்தில் காட்சி தருதல்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் காலை வெள்ளிக் குதிரையிலும், அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.

* சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் பவனி.

* மேல்நோக்கு நாள்.


Next Story