இந்த வார விசேஷங்கள்
மே மாதம் 9-ம் தேதியில் இருந்து மே மாதம் 15-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
9-ந் தேதி (செவ்வாய்)
* வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் பொங்கல் விழா.
* காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் பவனி.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் கண்ணாடி பல்லக்கில் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.
10-ந் தேதி (புதன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் மின்விளக்கு அலங்கார முத்துப்பல்லக்கில் வீதி உலா.
* காரைக்குடி கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.
* திருப்பதி ஏழுமலையான் கலசாபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
11-ந் தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.
* காரைக்குடி கொப்புடையம்மன் அன்ன வாகனத்தில் பவனி.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
12-ந் தேதி (வெள்ளி)
* காரைக்குடி கொப்புடையம்மன் கயிலாச வாகனத்தில் வீதி உலா.
* சென்னை கேசவப் பெருமாள் காலை தங்கப் பல்லக்கில் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
13-ந் தேதி (சனி)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் திருவிளையாடல்.
* காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி கேடயத்தில் பவனி.
* சென்னை கேசவப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு.
* வீரபாண்டி கவுமாரியம்மன் தெற்கு ரத வீதியில் ரத உற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் சப்தாவர்ணம்.
* மேல்நோக்கு நாள்.
14-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி விருட்ச வாகனத்தில் பவனி.
* வீரபாண்டி கவுமாரியம்மன், காலையில் தெற்கு ரத வீதியில் உலா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் விடையாற்று உற்சவம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
15-ந் தேதி (திங்கள்)
* விஷ்ணுபதி புண்ணியகாலம்.
* சர்வ ஏகாதசி.
* காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி குதிரையில் வீதி உலா.
* திருவல்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* கீழ்நோக்கு நாள்.