இந்த வார விசேஷங்கள்
11-ந் தேதி (செவ்வாய்)
* குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* திருவை குண்டம் வைகுண்டபதி புறப்பாடு கண்டருளல்.
* சமநோக்கு நாள்.
12-ந் தேதி (புதன்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம்.
* ராமேஸ்வரம் சேதுமாதவ சன்னிதிக்கு விநாயகப்பெருமான் எழுந்தருளி ஆராதனை செய்யும் விழா.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* திருப்போரூர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
* திருப்பதி ஏழுமலையான் சகசர கலசாபிஷேகம். (11-7-2023 முதல் 17-7-2023 வரை)
* கீழ்நோக்கு நாள்.
13-ந் தேதி (வியாழன்)
* சர்வ ஏகாதசி.
* கார்த்திகை விரதம்.
* திருவாடானை சிநேக வள்ளியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன், மகாலட்சுமி அலங்காரத்தில்பூத வாகனத்தில் பவனி.
* திருவரங்கம் நம்பெருமாள் சந்தனமண்டபம் எழுந்தருளி அலங்காரதிருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
14-ந் தேதி (வெள்ளி)
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க காமதேனு வாகனத்தில் பவனி.
* நயினார் கோவில் சவுந்தரநாயகி அம்மன்,பல்லாங்குழி ஆடி வரும் காட்சி.
* மேல்நோக்கு நாள்.
15-ந் தேதி (சனி)
* சனிப் பிரதோஷம்.
* மாத சிவராத்திரி.
* திருவல்லிபுத்தூர் ஆண்டாள் சந்திர பிரபையிலும், ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் பவனி.
* நயினார் கோவில் சவுந்திரநாயகி ராஜாங்க அலங்காரம், இரவு வெள்ளி சிம்ம வாகனத்தில் வீதி உலா.
* சமநோக்கு நாள்.
16-ந் தேதி (ஞாயிறு)
* நயினார்கோவில் சவுந்திரநாயகி அம்மன் ஆடிவரும் திருக்கோலம்.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கமல வாகனத்தில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
17-ந் தேதி (திங்கள்)
* தட்சிணாயன புண்ணியகாலம்.
* அமாவாசை .
* நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் காலையில் அன்ன வாகனத்திலும், இரவு பாலகுதிரை வாகனத்திலும் பவனி.
* திருவாடானை சிநேக வள்ளியம்மன் கிளி வாகனத்தில் வீதி உலா.
* சமநோக்கு நாள்.