மயிலாடுதுறை: பிரசன்ன சின்ன மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா


மயிலாடுதுறை: பிரசன்ன சின்ன மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

மயிலாடுதுறை அருகே திம்மநாயக்கன் படித்துறையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன சின்ன மாரியம்மன் கோவிலின் தீமிதி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

தரங்கம்பாடி,

மயிலாடுதுறை மாவட்டம்,காவிரிக்கரை திம்மநாயக்கன் படித்துறையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன சின்ன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 63-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.

கடந்த 4-ம் தேதி பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய உற்சவத்தின் தீமீதி திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் சக்தி கரகம் மற்றும் அலகு காவடிகள் எடுத்து காவிரி கரையில் இருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க சிலம்பாட்டம் பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டங்களுடன் வீதியுலாவாக கோவிலை வந்தடைந்தனர்.

அதன் பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர்.

இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். இவ்விழாவில் நகரமன்ற உறுப்பினர் காந்தி, விழா குழுவினர்கள்,பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story