கோவிந்தா.. கோவிந்தா.. மகா ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த மலையப்ப சாமி


கோவிந்தா.. கோவிந்தா.. மகா ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த மலையப்ப சாமி
x

திருமலை:

திருமலை பிரம்மோத்ஸவத்தின் 8-ம் நாளான இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை உபயதேவர்களுடன் ஸ்ரீமலையப்பசுவாமி தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மலையப்பசுவாமி இரு தாயார்களுடன் கூடிய கம்பீரமான தேரில் வீற்றிருந்து கோயில் மாட வீதிகளில் உலா வந்தார். பக்தர்கள் ஒவ்வொரு அடியிலும் கோவிந்த நாமத்தை மாடவீதிகளில் சொல்லி கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பழங்காலத்திலிருந்தே அரசர்களிடம் தேர் பிரபலம். பிரசித்தி பெற்ற கோவில்களில், திருவிழாக் காலங்களில் தேரின் மீது கடவுளின் திருவுருவம் வைக்கும் வழக்கம்,

திருமலையில் நடக்கும் ரதோத்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருமாட வீதிகளில் தேர் இழுக்கும்போது விபத்துகள் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி வந்தனர். வீதிகளில் இருந்த பக்தர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தேருக்கு வடம் கட்டி தேரை முன்னோக்கி இழுத்தனர். கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வரும் பக்தர்கள்/ரத உற்சவத்தில் பங்கேற்றால் மறு ஜென்மம் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதை தொடர்ந்து இன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை குதிரை வாகன வீதிஉலாவும் நடக்கிறது.



Next Story