கபிஸ்தலம் அகத்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு


கபிஸ்தலம் அகத்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
x

கபிஸ்தலம் அகத்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

தஞ்சாவூர்

கபிஸ்தலம்

கபிஸ்தலம் மங்கள விநாயகர், அகத்தீஸ்வரர், தத்துவராயசாமி உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு கோவிலில் குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி கடந்த 18-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடந்தது. 19-ந்தேதி கஜ பூஜை, கோ பூஜை, முதல் கால யாக சாலை பூஜை ஆகியவை நடந்தது. 20-ந்தேதி 2-ம் கால யாக சாலை பூஜை மற்றும் 3-ம் கால யாக சாைல பூஜை நடந்தது. நேற்று காலை 4-ம் கால யாக சாைல பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கடம்புறப்பாடு நடைபெற்று, மங்கள விநாயகர், அகத்தீஸ்வரர், தத்துவராயசாமிக்கு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் ராமநாதன் பிள்ளை, கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, டாக்டர் முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story