மகாகவி பாரதி அமர்ந்து பாடல் இயற்றிய கோவிலில் தெப்பத் திருவிழா கோலாகலம்


மகாகவி பாரதி அமர்ந்து பாடல் இயற்றிய கோவிலில் தெப்பத் திருவிழா கோலாகலம்
x

கடையம் வில்வ வனநாதர் - நித்திய கல்யாணி அம்பாள் கோவிலில் தெப்பத் திருவிழாவில் திரளானோர் பங்கேற்றனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து ராமநதி அணை செல்லும் வழியில் பிரசித்திபெற்ற வில்வ வனநாதர் - நித்திய கல்யாணி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவில் அமர்ந்துதான் கடையத்து மருமகனான மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பல்வேறு பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளன்று தெப்ப திருவிழா நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தெப்பத்திருவிழா நடந்தது.

இதனை முன்னிட்டு நேற்று காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு சுமார் 8 மணியளவில் சுவாமி அம்பாள் தெப்பத்திற்கு எழுந்தருளல் நடைபெற்று, தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து பின்னர் சிறப்பு தீபாரனையும் வானவேடிக்கையும் நடைபெற்றது.

விழாவி்ல் கடையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story