செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
சாணார்பட்டி அருகே செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திண்டுக்கல்
சாணார்பட்டி அருகேயுள்ள அஞ்சுகுளிபட்டியில் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கிராமத்திற்கு பழம் வைத்தல், தீர்த்தம், முளைப்பாரி எடுத்தல், விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. பின்பு 2 கால யாக சாலை பூஜைகள், தீபாராதனை, கடம் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை 9 மணி அளவில் மேட்டுக்கடை ஆதிபரஞ்ஜோதி சகலோக சபை மடாதிபதி திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அஞ்சுகுளிப்பட்டி ஊராட்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story