ஆச்சரியம் தரும் பத்ரகாளியம்மன்


ஆச்சரியம் தரும் பத்ரகாளியம்மன்
x

தெலுங்கானா மாநிலத்தில் ஆச்சரியம் தரும் பத்ரகாளியம்மன் அருள்பாலித்து வருகிறாள்.

தெலுங்கானா மாநிலம் ஹனம்கொண்டா மற்றும் வாரங்கல் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே மலை உச்சியில் அமைந்துள்ளது, பத்ரகாளியம்மன் ஆலயம்.

ஆந்திர தேசத்தின் வெங்கி பகுதியை வென்றதன் நினைவாக, சாளுக்கிய வம்சத்தின் இரண்டாம் புலிகேசி மன்னரால் கி.பி 625-ல் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் காகதீய மன்னர்கள் இந்தக் கோவிலில் உள்ள பத்ரகாளி அம்மனை, தங்களின் குல தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். அவர்கள் கோவிலுக்கு அருகில் ஒரு ஏரியையும் வெட்டினர். பிற்காலத்தில் இந்த அம்மன் ஆலயம் பல்வேறு போர்களின் காரணமாக, சேதமடைந்தது. 1950-ம் ஆண்டு, தேவி உபாசகரான கணேஷ் ராவ் சாஸ்திரி என்பவரால் இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் அருளும் பத்ரகாளியம்மனுக்கு ஒரு தனிச் சிறப்பு உள்ளது. தன்னுடைய கண்களால், தீர்க்கமாக பார்த்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்த அன்னையின் கண்கள், அபிஷேகம் செய்யும்போது, கண்களை மூடிக்கொள்வது போன்ற தோற்றத்தில் காட்சியளிப்பது மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. அபிஷேகப் பொருள், கண்களில் இருந்து வடிந்ததும், மீண்டும் கண்கள் திறந்துகொண்டது போன்று காணப்படும்.


Next Story