அறச்சலூர்பொன் அறச்சாலை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்;இன்று நடக்கிறது
அறச்சலூர் பொன் அறச்சாலை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.
அறச்சலூர்
அறச்சலூர் பொன் அறச்சாலை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.
பொன் அறச்சாலை அம்மன்
அறச்சலூர் வடுகப்பட்டி கிராமத்தில் பொன் அறச்சாலை அம்மன் கோவில் உள்ளது. அறச்சாலை அம்மன் அறத்தை நிலைநாட்டுகின்ற தேவியாக 3 காலங்களும், முப்பொழுதிலும் காக்கின்ற தேவியாகவும், அண்ட சராசரங்களின் பரிபாலிக்கும் ஈஸ்வரியாகவும் விளங்குகிறார்.
மேலும் பெண்களுக்கு சுமங்கலி வரம் அருளும் மங்கள ரூபினியாய், கல்வி, செல்வம், வீரம், விவசாயம் ஆகியவற்றில் அளவில்லா அபிவிருத்தியை தருவதில் கற்பக வல்லியாய் வீற்றிருந்து திருமண யோகமும், குழந்தை பாக்கியமும் கொடுக்கிறார்.
கும்பாபிஷேகம்
இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் நடந்து வந்தது. புனரமைப்பு பணி முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதைத்தொடர்்ந்து நேற்றுமுன்தினம் முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. நேற்று 2-ம் கால யாக பூஜை, 3-ம் கால யாக பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன். இதில் 40 குருக்கள் அமர்ந்து பூஜைகளை செய்தனர். பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி அளவில் 4-ம் கால பூஜை, மண்டல பூஜை, அக்னி காரியம், தியாக பூஜை, நாடி சந்தானம், யாத்திரதானம் நடக்கிறது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. அதன்பின்னர் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடக்கிறது.
அன்னதானம்
கோபுர மகா கும்பாபிஷேகம், அதை தொடர்ந்து பொன் அறச்சாலை அம்மனுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், கோ பூஜை செய்யப்பட்டு தசதானம், தச தரிசனம் நடக்கிறது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.