அணக்குடி கற்பக விநாயகர்- சாமுண்டீஸ்வரி கோவில் குடமுழுக்கு


அணக்குடி கற்பக விநாயகர்- சாமுண்டீஸ்வரி கோவில் குடமுழுக்கு
x

அணக்குடி கற்பக விநாயகர்- சாமுண்டீஸ்வரி கோவில் குடமுழுக்கு

திருவாரூர்

திருவாரூர் ஒன்றியம் அணக்குடி கிராமத்தில் கற்பக விநாயகர், சாமுண்டீஸ்வரி மற்றும் அய்யனார் கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி ஹோமம் செய்யப்பட்டு யாக சாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து 4-ம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து, புனித நீர் கலசம் யாகசாலையில் இருந்து மேளதாளங்களுடன் புறப்பட்டு கற்பக விநாயகர், சாமுண்டீஸ்வரி மற்றும் அய்யனார் கோவில் விமான கலசங்களை அடைந்தது. அங்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

இதேபோல் நீடாமங்கலம் அருகே உள்ள நார்த்தாங்குடி சீதளாதேவி மாரியம்மன் கோவிலிலி் குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கடம்புறப்பாடு நடைபெற்று, செல்லக்குட்டி அய்யனார், பிடாரி அம்மன், சீதளாதேவி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடந்தது.


Next Story