கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது


கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது
x

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் கொடியேற்த்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கபட்டு திருவனந்தல் பூஜையும் , அதையடுத்து சுவாமி , அம்பாளுக்கும், பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் இன்று காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றமும், அதைத் தொடர்ந்து நந்தி, பலிபீடம், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

இன்று காலை கொடியேற்றதுடன் தொடங்கிய திருவிழா (22ம் தேதி) வரை ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் சார்பில், அம்பாள் திருவீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய திருநாளான 9-ம் திருநாள் மண்டகப்படிதாரர்களான வணிக வைசிய சங்கத்தினர் சார்பில் (19ம் தேதி) புதன்கிழமை காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறவுள்ளது. அன்று இரவு 7.30 மணிக்கு மேல் அம்பாள் அன்ன வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

10 ம் நாள் திருநாளான 20-ந் தேதி காலை 8 மணிக்கு அம்மன் பல்லக்கில் திரு வீதி உலா, இரவு 7.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி நடக்கிறது. 11ம் நாள் திருநாளான 21ந் தேதி மதியம் 1 மணிக்கு தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கிறார். 12 ம் நாளான 22ஆம் தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதிஉலா நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இரவு 7.31 க்கு மேல் 8.15 மணிக்குள் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர், சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் செல்லும் வைபவம் நடைபெறும்.


Next Story