இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்


இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்
x

சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ரதோற்சவம்.

பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, ஐப்பசி 30 (வியாழக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: திருதியை நண்பகல் 1.34 மணி வரை, பிறகு சதுர்த்தி

நட்சத்திரம்: மூலம் பின்னிரவு 3.49 மணி வரை, பிறகு பூராடம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

இன்று சுப முகூர்த்த தினம். சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ரதோற்சவம். குமாரவயலூர் முருகப்பெருமான் கஜமுகாசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல். ஐயடிகள் காடவர்கோன் நாயனார் குருபூஜை. மாயவரம் கவுரிமாயூரநாதர் கடைமுக உற்சவ தீர்த்தவாரி. வள்ளியூர் முருகப்பெருமான் காலை ஏக சிம்மாசனத்தில் பவனி. ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருநட்சத்திர வைபவம். ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.

ராசிபலன்

மேஷம்: திறமை பளிச்சிடும் நாள். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். பிரியமானவர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும்.

ரிஷபம்: விரயங்கள் கூடும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாக பேசிவிட்டு பிறகு வருந்துவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

மிதுனம்: பிரச்சினைகள் குறையும் நாள். பெற்றோர் வழியில் உதவி கிடைக்கும். பழைய வாகனத்தை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் பெறுவீர்கள்.

கடகம்: பொருளாதார நிலை உயரும் நாள். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட துயரம் அகலும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை சமாளிப்பீர்கள்.

சிம்மம்: அடுத்தவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். அயல் நாட்டிலிருந்து அனுகூல தகவல் பாக்கிகள் வசூலாகி வரலாம். பாக்கிகள் பணவரவை கூட்டும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கன்னி: கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உள்ள நுணுக்கத்தை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

துலாம்: வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். பக்குவமாகப்பேசி பாராட்டுகளை பெறுவீர்கள். உற்றார், உறவினர்கள் உதவி கேட்டு வரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

விருச்சிகம்: ஆலய வழிபாட்டல் ஆனந்தம் காண வேண்டிய நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியை தரும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

தனுசு: மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.

மகரம்: பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். எதிரிகள் உதிரியாவர். வாழ்க்கை துணைவழியே மகிழ்ச்சிதரும் செய்தியொன்று வந்து சேரும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கும்பம்: நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். உறவினர் வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள்.

மீனம்: கொள்கை பிடிப்போடு செயல்படும் நாள். வாழ்க்கைத்தரம் உயர வழி செய்து கொள்வீர்கள். தொழிலில் மாற்றம் செய்ய எடுத்த புதுமுயற்சி கைகூடும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும்.


Next Story