17 ஆண்டுகளுக்கு முன்பு பதிவேற்றப்பட்ட முதல் வீடியோவை பகிர்ந்த யூடியூப் நிறுவனம் - வைரல் வீடியோ
யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் வீடியோவை அந்த நிறுவனம் தற்போது பகிர்ந்துள்ளது.
கலிபோர்னியா,
உலகம் முழுவதும் உள்ள பல கோடி மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களுள் ஒன்றாக யூடியூப் விளங்கி வருகிறது. ஒரு நாளில் மட்டும் இதில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது.
இந்த நிலையில் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் வீடியோவை அந்த நிறுவனம் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 2005 ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்ட யூடியூப் நிறுவனம் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளது.
யூடியூப்பின் இணை நிறுவனரான ஜாவத் கரீம் கலிபோர்னியாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் அந்த வீடியோவை எடுத்து அதனை முதல் வீடியோவாக யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். இதுவரை அந்த வீடியோவை 235 மில்லியன் பேர் பார்த்துள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.