#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் நெருக்கடியை தீர்க்க உதவ தயார் - சீன அதிபர் ஜின்பிங்
உக்ரைன் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வரும் நிலையில் நெருக்கடியை தீர்க்க உதவ தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
Live Updates
- 16 Jun 2022 3:30 PM IST
உக்ரைன் 2 ஆண்டுகளில் உலக வரைப்படத்திலிருந்து காணாமல் போகலாம் - ரஷியா முன்னாள் அதிபர் எச்சரிக்கை
“உக்ரைன் இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலக வரைப்படத்திலிருந்து காணாமல் போகலாம்” என்று ரஷிய முன்னாள் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷியாவின் முன்னாள் அதிபரான டிமிட்ரி மெத்வதேவ், உக்ரைன் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து டிமிட்ரி மெத்வதேவ் கூறியதாவது,
“உக்ரைன் தனது முதலாளிகளிடமிருந்து வரும் 2 ஆண்டுகளில் டெலிவரிக்கான கட்டணத்துடன் எல்என்ஜியைப் பெற விரும்புகிறது என்று ஓர் அறிக்கையைப் பார்த்தேன். உக்ரைனின் இந்தத் திட்டம் உடைந்து விடும். முதலில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக வரைபடத்தில் உக்ரைன் இருக்குமா? அமெரிக்கர்களுக்கு அதை பற்றி கவலையில்லை. அவர்கள் 'ரஷியா எதிர்ப்பு' திட்டத்தில் மிகவும் முதலீடு செய்கிறார்கள், மற்ற அனைத்தும் அவர்களுக்கு ஒன்றுமில்லை” என்றார்.
- 16 Jun 2022 1:02 PM IST
உக்ரைனுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்கள் வழங்குவதாக ஜோ பைடன் அறிவிப்பு
உக்ரைனுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கப்பல் ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகள் , பீரங்கி ராக்கெட்டுகள் மற்றும் ஹோவிட்சர்களுக்கான சாதனங்கள் ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன.
உக்ரைனில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர், முக்கியமான மருத்துவப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, உணவு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு பணம் வழங்குதல் உள்ளிட்ட மனிதாபிமான உதவியாக 225 மில்லியன் டாலர் தருவதாக ஜோ பைடன் அறிவித்தார்.
- 16 Jun 2022 6:00 AM IST
லுஹான்ஸ்கின் உக்ரேனிய கவர்னர் செர்ஹி ஹைடாய் நிருபர்கள் சந்திபில், “சீவிரோடோனெட்ஸ்கில் இன்றும் கடுமையான சண்டை தொடர்கிறது. ஏனெனில் ரஷிய படைகள் அதிக ஆள்பலத்தையும், ஆயுதங்களையும் கொண்டிருப்பதால் நகரத்தின் நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.
- 16 Jun 2022 5:03 AM IST
ரஷிய அதிகாரிகள் அசோட் ஆலையில் இருந்து ஒரு மனிதாபிமான தாழ்வாரத்தை நேற்று அறிவித்தனர், ஆனால் அது உக்ரேனியப் படைகளுக்கு அல்ல என்றும் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு பொதுமக்களை அழைத்துச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
- 16 Jun 2022 4:37 AM IST
உக்ரேனியப் படைகள் நகரின் முற்றுகையிடப்பட்ட அசோட் இரசாயன ஆலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதை நாசப்படுத்தியதாக ரஷியா ஆதரவு பிரிவினைவாதிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
அங்கு சுமார் 500 பொதுமக்கள் மற்றும் அறியப்படாத எண்ணிக்கையிலான உக்ரேனிய போராளிகள் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தப்பிக்க தஞ்சம் அடைவதாக நம்பப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 16 Jun 2022 4:07 AM IST
உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள சீவிரோடோனெட்ஸ்க் நகரத்தின் மீதான போர் சமீபத்திய வாரங்களில் ரஷியாவின் தாக்குதலின் மையமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 16 Jun 2022 3:22 AM IST
உக்ரைன் நெருக்கடியை தீர்க்க உதவ தயார் - சீன அதிபர் ஜின்பிங்
உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜின்பிங் நேற்று ரஷிய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்க உதவும் ‘ஆக்கப்பூர்வமான பங்கை’ வகிக்க சீனா தயாராக இருப்பதாக புதினிடம் ஜின்பிங் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒரு பொறுப்பான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதன் மூலம் உக்ரைன் நெருக்கடியின் சரியான தீர்வுக்கு ஊக்கமளிக்க வேண்டும். சீனா தனது ஆக்கபூர்வமான பாத்திரத்தை தொடர்ந்து செய்ய தயாராக உள்ளது.
உலக அளவில் அமைதியைப் பாதுகாப்பதில் நாங்கள் தீவிரமாகப் பங்களிக்கிறோம். அதேபோல், உலகில் நிலையான பொருளாதார ஒழுங்கைப் பேணுவதற்கு நாங்கள் பங்களிக்கிறோம் என்று ஜின்பிங் கூறினார்.
ரஷியாவின் நெருங்கிய கூட்டாளியான சீனா, போர் தொடங்கியதில் இருந்து ரஷியாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பை கண்டிக்க உறுதியாக மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.