உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53.09 கோடியை தாண்டியது ..!!


உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53.09 கோடியை தாண்டியது ..!!
x

கோப்புப்படம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50.14 கோடியாக அதிகரித்துள்ளது.

ஜெனிவா,

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53.09 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,09,20,107 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50,14,96,516 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,31,13,953 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63,09,638 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 8,56,99,847, உயிரிழப்பு - 10,31,218, குணமடைந்தோர் - 8,19,98,223

இந்தியா - பாதிப்பு - 4,31,48,500, உயிரிழப்பு - 5,24,539, குணமடைந்தோர் - 4,26,07,177

பிரேசில் - பாதிப்பு - 3,09,21,145, உயிரிழப்பு - 6,66,365, குணமடைந்தோர் - 2,99,39,873

பிரான்ஸ் - பாதிப்பு - 2,94,39,416, உயிரிழப்பு - 1,48,129, குணமடைந்தோர் - 2,87,79,968

ஜெர்மனி - பாதிப்பு - 2,62,54,124, உயிரிழப்பு - 1,39,132, குணமடைந்தோர் - 2,50,86,௩௦௦


தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

இங்கிலாந்து - 2,22,77,696

ரஷியா - 1,83,15,292

தென்கொரியா - 1,80,67,669

இத்தாலி - 1,73,55,119

துருக்கி - 1,50,68,017

ஸ்பெயின் - 1,23,26,264

வியட்நாம் - 1,07,15,247

அர்ஜெண்டீனா - 91,78,795

ஜப்பான் - 87,37,532

நெதர்லாந்து - 80,81,992

ஈரான் - 72,31,284


Next Story