வேலைவேண்டி வித்தியாசமான முயற்சி: கேக்கில் 'ரெஸ்யூம்' எழுதி விண்ணப்பித்த பெண்..!!
பெண் ஒருவர் கேக்கில் 'ரெஸ்யூம்' எழுதி பிரபல நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்துள்ளார்.
கரோலினா,
அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா மாகாணத்தில் வசிக்கும் கார்லி பாவ்லினாக் பிளாக்பர்ன் என்ற இளம் பெண் நைக் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பல முறை தன் சுயவிவரங்கள் அடங்கிய 'ரெஸ்யூமை' அந்நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறார். ஆனால் அவருக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை.
இந்நிலையில் அவரின் தோழி ஒரு யோசனை கூற, அதன்படி வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். அதாவது ஒரு கேக்கை வாங்கி அதில் தன் 'ரெஸ்யூமை' எழுதி அந்நிறுவனத்தில் வேலைக்கு விண்ணபித்துள்ளார்.. அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் நிகழ்ச்சி நடந்த சமயத்தில் இவர் அனுப்பிய கேக் சென்றடைந்திருக்கிறது.
இது குறித்து அந்த பெண் தெரிவித்திருப்பதாவது, இரண்டு வாரங்களுக்கு முன்பாக, நைக் நிறுவனத்திற்கு கேக்கில் தன் சுய விபர குறிப்புகளை அனுப்பினேன். ஆனால் அந்நிறுவனம் தற்போது யாருக்கும் வேலை வாய்ப்பு வழங்க தயாராக இல்லை. இருப்பினும், நான் யார் என்று அந்த நிறுவனத்திடம் நிரூபிக்க வேண்டும்.
எனவே தான், அந்நிறுவனத்தில் நிகழ்ச்சி நடந்த போது, இவ்வாறு அனுப்பி வைத்தேன். அதைவிட வேறு சிறப்பான வழி எனக்கு தோன்றவில்லை என்று கூறியிருக்கிறார்.
இவரின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு பிறகும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இவரின் இந்த வித்தியாசமான விடா முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.