ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீ - 90 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் எரிந்து நாசம்
கடும் வெப்பம் மற்றும் காற்று காரணமாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
மேட்ரிட்,
ஐரோப்பிய நாடுகளில் நடப்பாண்டில் வெப்ப அலையின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் அங்கு சராசரி வெப்பநிலை உயர்ந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதே சமயம் பல இடங்களில் காட்டுத்தீ பற்றி எரியும் நிகழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள டெலோடோ பகுதியில் உள்ள காட்டுப்பகுதிகளில் ஏற்பட்ட தீயானது வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயால் சுமார் 90 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள மரம், செடி உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகியுள்ளன.
கடும் வெப்பம் மற்றும் காற்று காரணமாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஸ்பெயின் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story