ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த காத்திருத்த மக்களுக்கு மன்னர் சார்லஸ் செய்த செயல்...!


ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த காத்திருத்த மக்களுக்கு மன்னர் சார்லஸ் செய்த செயல்...!
x

வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. ராணியின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் பல்வேறு இடங்களில் இருந்தும் லண்டன் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களிடம், மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேசினர். பின்னர் பொதுமக்கள் அவர்கள் இருவருக்கும் ஆறுதல் கூறினர். அதனை ஏற்று கொண்ட இருவரும் கைகளை குலுக்கி, நன்றி தெரிவித்து கலந்துரையாடினர்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, நாளை ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


Next Story