பிரான்ஸ் நாட்டின் செய்ன் நதியில் சுற்றித் திரியும் திமிங்கலம்...
திமிங்கலத்தின் கூட்டத்தில் இருந்து ஒன்று மட்டும் தனியாக பிரிந்து செய்ன் நதியில் நுழைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பாரிஸ்,
பிரான்ஸ் நாட்டில் உள்ள செய்ன் நதியில் திமிங்கலம் ஒன்று மிதந்து திரிவது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்திய போது, இது பாதுகாக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெலுகா திமிங்கலம் என்று தெரிய வந்தது.
இந்த பெலுகா திமிங்கலமானது ஆர்ட்டிக் கடல் பகுதியில் காணப்படுகிறது. இந்த வகை திமிங்கலங்கள் முழுமையாக 4 மீட்டர்(13 அடி) நீளத்திற்கு வளரக்கூடியது. குளிர்காலத்தின் பிற்பகுதியில் இவை உணவு தேடி ஆர்ட்டிக் கடல் பகுதியை விட்டு சற்று விலகி செல்கின்றன.
அவ்வாறு சென்ற திமிங்கல கூட்டத்தில் இருந்து ஒன்று மட்டும் தனியாக பிரிந்து செய்ன் நதியில் நுழைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த திமிங்கலத்தை பிரான்ஸ் மீட்புக் குழுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story