ரஷியாவை தோற்கடிக்க மேற்கத்திய நாடுகள் விரும்புகிறது? முயற்சித்து பார்க்கட்டும் - அதிபர் புதின்


ரஷியாவை தோற்கடிக்க மேற்கத்திய நாடுகள் விரும்புகிறது? முயற்சித்து பார்க்கட்டும் - அதிபர் புதின்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 8 July 2022 12:22 PM IST (Updated: 8 July 2022 12:23 PM IST)
t-max-icont-min-icon

போர் களத்தில் ரஷியாவை தோற்கடிக்க மேற்கத்திய நாடுகள் விரும்புவதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா 135-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், தலைநகர் மாஸ்கோவில் நாடாளுமன்ற தலைவர்களுடன் அதிபர் விளாடிமிர் புதின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய புதின், போர் களத்தில் ரஷியாவை தோற்கடிக்க வேண்டுமென மேற்கத்தியநாடுகள் விரும்புகின்றன. நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள். மேற்கத்தியநாடுகள் முயற்சித்து பார்க்கட்டும். கடைசி உக்ரைனியர் இருக்கும்வரை மேற்கத்தியநாடுகள் நம்முடன் சண்டையிட விரும்புவதாக நாம் கேட்டிருகிறோம். இது உக்ரைனிய மக்களுக்கு மிகவும் சோகமானது. ஆனால், இந்த போர் அதை நோக்கி தான் சென்றுகொண்டிருக்கிறது.

சண்டை நீண்டுகொண்டே சென்றால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் மங்கிக்கொண்டே செல்லும்' என்றார்.


Next Story