பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும் வரை ஓயமாட்டோம்: ஐ.நா.வில் ருசிரா கம்போஜ் பேச்சு
பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும் வரை ஓயமாட்டோம் என ஐ.நா.வில் நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் இன்று பேசியுள்ளார்.
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் இன்று பேசும்போது, உலக நாடுகள் தீவிர கவனத்தில் கொள்வதற்கு முன்பே தசாப்தங்களாக எல்லை கடந்த பயங்கரவாதத்தின் பயங்கரங்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
இதில் பல அப்பாவி உயிர்களை இழந்து விட்டோம். பூஜ்ய சகிப்பு தன்மையுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். தொடர்ந்து போராடுவோம். எங்களது பிரதமர் குறிப்பிட்டது போன்று, பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும் வரை ஓயமாட்டோம்.
2 ஆண்டுகளாக அமைதி, பாதுகாப்பு மற்றும் வளம் ஆகியவற்றிற்கு ஆதரவாக பேசி வருகிறோம். பயங்கரவாதம் போன்ற மனிதகுலத்தின் பொதுவான எதிரிகளுக்கு எதிராக நாங்கள் குரலெழுப்ப தயங்கியதில்லை.
இந்த 2 ஆண்டுகளில் பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் குரலெழுப்பி உள்ளோம். பொறுப்புடனும், ஒற்றுமை தன்மையுடனும் சர்வதேச சமூகம் பேச அவசியம் வாய்ந்த அதன் வெவ்வேறு வடிவங்களை பற்றியும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.