ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு..!
ஐஸ்லாந்தில் நிலநடுக்கம் காரணமாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
ரையாக்விக்,
ஐஸ்லாந்து தலைநகர் ரையாக்விக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு ஆய்வு மையம் தரப்பில், "ரெய்க்யவிக் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கங்கள் நாட்டின் தென் பகுதியில் பரவலாக உணரப்பட்டுள்ளது. இதனால் எரிமலை சீற்றம் விரைவில் ஏற்படக்கூடும். இதில் பல நில நடுக்கங்கள் மிதமான ( ரிக்டர் அளவில் 4.1 ) அளவில் பதிவாகியுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நெருப்பு குழம்பு வெளியேறியது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நெருப்பினால் புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் புகை மடலமான காட்சியளிக்கிறது.
இதற்கு முன்னர் ஏப்ரல் 2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் ஹே ஜப்ஜல்லாஜோகுல் எரிமலை வெடிப்பு காரணமாக 1,00,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் இங்கு எரிமலை வெடிப்பு ஏற்பட்டது குறிப்பிடதக்கது.