அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை... விவேக் ராமசாமி திடீர் அறிவிப்பு
டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபரான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
இதற்கிடையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அத்துடன், தான் அதிபராக வந்தால் பல மாற்றங்களை கொண்டுவருவதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்து உள்ளார். டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதால், தான் விலகுவதாகவும், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.