புதியகொரோனா மாறுபாடு...! புதிய முகக்கவசம் ...! புத்தாண்டு...! வைரல் வீடியோ
கொரோனா பீதிக்கு மத்தியில் சாப்பிடுவதற்கு கொக்கு வடிவ முகக்கவசத்தை பயன்படுத்தும் சீனர்
பீஜிங்:
சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து ஆஸ்பத்திரிகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
அதே போல உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வழிவது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கொரோனாவால் ஒருவர் கூட இறந்ததாக சீனாவில் பதிவாகவில்லை.
நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால் தினமும் 5 ஆயிரம் பேர் பலியானதாக லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் எப்போதும் பிரச்சனையை கையாள்வதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்குகிறார்கள். இதற்கு மத்தியில், கொக்கு வடிவ முகக்கவசத்துடன் ஒருவர் சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி பல பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீடியோவில், ஒரு நபர் உணவகத்தில் சாப்பிடுவதைக் காணலாம். முகக்கவசம் ஒரு பெரிய கொக்கு வடிவத்தில் காகிதத்தில் இருந்து உருவாக்கப்பட்டு உள்ளது. அவர் சாப்பிடும் போதெல்லாம், முகமூடி ஒரு கொக்கு வாய்போல் திறக்கிறது.
இந்த வீடியோவை சபீர் என்பவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 17 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ 18,000 பார்வைகளைக் குவித்துள்ளது. பலர் சிரிப்பு எமோஜிகளை பதிவில் பதிவிட்டுள்ளனர்.
சீனாவின் சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி, இந்த வாரம் ஒரே நாளில் சீனாவில் சுமார் 3.7 கோடி மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம், இதனால் சீனா நாட்டின் கொரோனா பாதிப்பு உலகிலேயே மிகப்பெரியது. வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் தோல்வி மற்றும் வெளியேறும் உத்தியை பொதுமக்களுக்கு தெரிவிக்கத் தவறியது, அத்துடன் வைரஸை ஒழிப்பதில் விரிவான கவனம் செலுத்தாது, சீனாவின் மருத்துவ உள்கட்டமைப்பில் உள்ள அழுத்தம் ஆகியவை இந்த கொரோனா பாதிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.