இந்தோ பசிபிக் பிராந்தியத்தில்இந்தியாவின் பங்கை உறுதிப்படுத்த அமெரிக்கா துணை நிற்கும் - பென்டகன் தகவல்

Image Courtacy: AFP
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில்இந்தியாவின் பங்கை உறுதிப்படுத்த அமெரிக்கா துணை நிற்கும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,
இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுடன் அமெரிக்கா தனது ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா தனது பரந்த பங்கை உறுதிப்படுத்தி அமெரிக்கா துணை நிற்கும் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "இந்தியா தனது சொந்த பாதுகாப்பு நவீனமயமாக்கலை எவ்வாறு துரிதப்படுத்துகிறது என்பதைப் பார்க்கும்போது, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் நிகர பாதுகாப்பு வழங்குனராக இந்தியா சிறப்பாக பங்கு வகிக்கிறது. அதே சமயம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இன்னும் பரந்த அளவில் இந்தியா தனது பங்கை உறுதிப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. இதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும்" என்றார்.