அமெரிக்கா-தென் கொரியா கூட்டுப் பயிற்சி எதிரொலி; வடகொரியா ஏவுகணை சோதனை
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டுப் பயிற்சியை தொடர்ந்து வடகொரியா இன்று பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
பியாங்க்யாங்,
அமெரிக்கா மற்றும் ஐ.நா.வின் தொடர் எச்சரிக்கைகளை மீறி வடகொரியா பல்வேறு ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
அதே சமயம் அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றைய தினம் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ராணுவத்தினர் இணைந்து சக்திவாய்ந்த போர்விமானங்களை பறக்கவிட்டு கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று வடகொரியாவின் கிழக்கு கரையில் இருந்து வடகொரிய ராணுவத்தினர் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளனர். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டுப் பயிற்சிகளால் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வடகொரிய அரசு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story