லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு அமெரிக்கா ரூ.3,500 கோடி ராணுவ உதவி


லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு அமெரிக்கா ரூ.3,500 கோடி ராணுவ உதவி
x

IcourtesyMAGE: AP

தினத்தந்தி 25 Jun 2022 5:46 AM IST (Updated: 25 Jun 2022 6:56 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், 122-வது நாளை எட்டியது.


Live Updates

  • ரஷியாவின் கூட்டணி நாடாக உள்ள பெலாரஸ் நாட்டை போரில் இழுக்கும் நோக்கத்துடன் ரஷியா உள்ளது.
    25 Jun 2022 6:56 PM IST

    ரஷியாவின் கூட்டணி நாடாக உள்ள பெலாரஸ் நாட்டை போரில் இழுக்கும் நோக்கத்துடன் ரஷியா உள்ளது.




    உக்ரைனின் வடக்கே செர்னிகிவ் நகரில் உள்ள தேஸ்னா கிராமத்தின் மீது பெலாரஸ் நாட்டில் இருந்து இன்று அதிகாலை 20 ஏவுகணைகள் ஏவப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டன.

    இதுபற்றி உக்ரைனின் வடக்கு ராணுவம் முகநூலில் வெளியிட்டு உள்ள செய்தியில், உக்ரைனின் கீவ் நகருக்கு அருகே உள்ள எல்லை பகுதியில் ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த ஏவுகணைகள், பெலாரஸ் நாட்டில் இருந்து ஏவப்பட்டு உள்ளன.

    உக்ரைன் மீது நடத்தப்படும் இந்த போரில், பெலாரஸ் நாட்டையும் உள்ளே இழுக்கும் நோக்கத்துடன் ரஷிய கூட்டமைப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது.

  • 25 Jun 2022 5:21 PM IST

    உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து; ரஷிய மக்கள் போராட்டம்

    சமீபத்தில் முடிவடைந்த ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில், உக்ரைனுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டது. மறுமுனையில், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்து வரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்டை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

    உக்ரைன் மற்றும் மால்டோவா நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவை எதிர்த்து ரஷிய மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.

    இதனை கண்டித்த உக்ரைன் தரப்பில், அந்நாட்டின் தூதரக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இத்தகைய நடவடிக்கைகள் ரஷியாவின் பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

    ‘ஆக்கிரமிப்பு, வற்புறுத்தல் மற்றும் மரியாதை இல்லாமை ஆகியவற்றின் அடிப்படையிலான கொள்கைகளை’ கடந்த பல ஆண்டுகளாக ரஷியா இழந்துவிட்டது. அதன் பின், ரஷியாவால் இப்போது செய்யக்கூடிய விஷயம், மற்ற நாடுகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களை தொடர்வது மட்டுமே” என்றார்.

  • 25 Jun 2022 1:01 PM IST

    உக்ரைனின் யொவ்ரிவ் நகரில் உள்ள ராணுவ தளம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்ததாக மகாண கவர்னர் தெரிவித்துள்ளார்

  • 25 Jun 2022 5:47 AM IST

    வாஷிங்டன், ‌

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், 122-வது நாளை எட்டியது. இந்தப் போரில் உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.

    அந்த வகையில் இப்போதும் 450 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3500 கோடி) மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.

    இதற்காக அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

    இந்த ராணுவ உதவியில் 4 பீரங்கி ராக்கெட் அமைப்புகள், 18 தந்திர உபாய வாகனங்கள், 1,200 கையெறி குண்டு லாஞ்சர்கள், 2 ஆயிரம் எந்திர துப்பாக்கிகள் உள்ளிட்டவை அடங்கும். இதற்கிடையே போரில் கிழக்கு உக்ரைனில் சீவீரோடொனெட்ஸ்க் நகரில் ரஷிய படைகளால் சுற்றி வளைக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் உக்ரைன் படைகள் பின்வாங்கப்போவதாக பிராந்திய கவர்னர் செர்கி ஹைடாய் அறிவித்துள்ளார்.


Next Story