அரசு இணையதளங்களில் இந்தி, குஜராத்தி உள்ளிட்ட ஆசிய மொழிகளில் மொழிபெயா்ப்பு - அமெரிக்க ஜனாதிபதி ஆணையம் பாிந்துரை


அரசு இணையதளங்களில் இந்தி, குஜராத்தி உள்ளிட்ட ஆசிய மொழிகளில் மொழிபெயா்ப்பு - அமெரிக்க ஜனாதிபதி ஆணையம் பாிந்துரை
x

அமொிக்க அரசாங்க இணையதளங்களில் இந்தி, குஜராத்தி உள்ளிட்ட ஆசிய மொழிகளில் மொழிபெயா்த்து வெளியிட அமெரிக்க ஜனாதிபதி ஆணையம் பாிந்துரைத்துள்ளது.

வாஷிங்டன்,

ஆசிய-அமெரிக்கர்கள் மற்றும் பூர்வீக ஹவாய், பசிபிக் தீவுகள் ஆணையத்தின் கூட்டம் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆணையம் கூட்டாட்சி இணையதளங்களை ஹிந்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி மற்றும் பிற ஆசிய மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரைத்தது.

இதனைத்தொடர்ந்து ஆசிய-அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மற்றும் பசிபிக் தீவுகளில் வசிப்பவர்கள் பற்றிய ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவானது இது தொடர்பான பரிந்துரைகளுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முழு ஆணையம், பல ஆசிய-அமெரிக்கர்கள் மற்றும்பூர்வீக ஹவாய் மற்றும் பசிபிக் தீவுகளில் வசிப்பவர்களின் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தங்கள் வலைத்தளங்களில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் படிவங்களை ஃபெடரல் ஏஜென்சிகள் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இருந்தபோதும் இதுதொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதி மாளிகை எடுக்க வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமொிக்காவில் வசிக்கும், ஆசிய-அமெரிக்கர்கள் மற்றும் பூர்வீக ஹவாய், பசிபிக் தீவுகளை சோ்ந்தவா்களின் மக்கள் தொகை தற்போது அதிகாித்து வருகிறது. இது வரும் 2060-ம் ஆண்டில் 40 மில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமொிக்க பொருளாதாரத்தில் அவா்கள் முக்கிய பங்கு வகிங்கின்றனா்.


Next Story