அமெரிக்க ராணுவத்தில் தலைப்பாகை, தாடி, ஹிஜாப் அணிவதை அனுமதிக்கும் சீருடை கொள்கை பரிசீலனை!


அமெரிக்க ராணுவத்தில் தலைப்பாகை, தாடி, ஹிஜாப் அணிவதை அனுமதிக்கும் சீருடை கொள்கை பரிசீலனை!
x

அமெரிக்க ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் தலைப்பாகை போன்ற மதச் சின்னங்களை சட்டப்பூர்வமாக்க ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் ஹிஜாப், தொப்பி, தலைப்பாகை மற்றும் தாடி அணிவதை சட்டப்பூர்வமாக்க அமெரிக்க ஜனாதிபதி ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

அமெரிக்க ராணுவத்தில் தலைப்பாகை, தாடி, ஹிஜாப் போன்ற பல்வேறு மதக் குறியீடுகளை ராணுவத்தினர் அணிந்துகொள்வது, அமெரிக்க ராணுவத்தின் சீருடை வழிகாட்டுதல்களில் இருந்து தடை செய்யப்பட்டது. 1981 முதல், ராணுவத்தில் இதுபோன்ற மதச் சின்னங்களை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவம் மற்றும் விமானப்படை ஆகியவை முறையே 2017 மற்றும் 2020ல் தங்கள் சீருடைக் கொள்கைகளை மாற்றிக் கொண்டன.இப்போது அமெரிக்க ராணுவம் மற்றும் விமானப்படையில் பணிபுரியும் நூற்றுக்கணக்கானோர் மதச் சின்னங்களை அணிந்திருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.

எனினும், மத அடையாளங்களை குறிக்கும் தலைப்பாகை, தாடி, ஹிஜாப் போன்றவற்றை அணிவதை அமெரிக்க ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் சில பிரிவுகள் அனுமதித்தன.அதனால் இராணுவத்தில் முரண்பாடு நிலவியது.

இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ஆலோசனைக் குழு, அமெரிக்க ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் தரப்படுத்தப்பட்ட சீரான சீருடை கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

ஆசிய அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மக்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகள் மீதான விவாகரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசனைக் குழு வெள்ளிக்கிழமை அன்று தனது முதல் அறிக்கையை வெளியிட்டது.

அதன்படி, டர்பன்கள், தாடிகள், ஹிஜாப்கள் மற்றும் தலைப்பாகை போன்ற மத நம்பிக்கை பொருட்களை ராணுவத்தினர் அணிந்துகொள்ள அனுமதிக்கும் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் உள்நாட்டு கொள்கை கவுன்சில் தற்போது பரிந்துரையை மதிப்பாய்வு செய்து வருகிறது. அதன்பின், அதை செயல் வடிவம் ஆக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முடிவுக்காக அனுப்பப்படும்.


Next Story