வர்த்தக உறவை மேம்படுத்த சீனாவுடன் அமெரிக்க மந்திரி ஆலோசனை
வர்த்தக உறவை மேம்படுத்த சீனாவுடன் அமெரிக்க மந்திரி ஆலோசனை நடத்தினார்.
பீஜிங்,
சீனா-அமெரிக்கா இடையேயான உறவில் சமீப காலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இணைய பாதுகாப்பு குறைபாடு காரணமாக சீன தகவல் உள்கட்டமைப்பு நிறுவனங்களின் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. மேலும் தைவான் விவகாரம் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் இரு நாடுகளின் வர்த்தகத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இந்தநிலையில் அமெரிக்க வர்த்தகத்துறை மந்திரி ஜினா ரைமண்டோ 4 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். அப்போது வணிகம் மற்றும் சுற்றுலா துறையில் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது, பொருளாதார உறவில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்வது குறித்து சீன வர்த்தக துறை மந்திரியுடன் ஆலோசனை நடத்தியதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related Tags :
Next Story